Saturday , April 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 319)

இலங்கை செய்திகள்

சுமந்திரனின் கருத்து எம்மை கூட்டமைப்பிலிருந்து வெளியேற வைக்கும்: தமிழீழ விடுதலை இயக்கம்

சுமந்திரனின் கருத்து - தமிழீழ விடுதலை இயக்கம்

சுமந்திரனின் கருத்து எம்மை கூட்டமைப்பிலிருந்து வெளியேற வைக்கும்: தமிழீழ விடுதலை இயக்கம் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், போர்க்குற்ற விசாரணைக்காக அரசாங்கத்தினால் கோரப்படும் இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் …

Read More »

நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்: சம்பந்தன்

நிலைமாறுகால நீதி செயன்முறை : சம்பந்தன்

நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்: சம்பந்தன் நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, இச் செயன்முறைகளின் பெண்களின் முழுமையான பங்களிப்பை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள செய்தியிலேயே இக் கோரிக்கையை விடுத்துள்ளார். கடந்த கால ஆயுதப் போராட்டத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் பெண்களே என சுட்டிக்காட்டியுள்ள …

Read More »

இந்திய மீனவர் சுட்டுக்கொலை : கூட்டமைப்பு கண்டனம்

இந்திய மீனவர் சுட்டுக்கொலை : கூட்டமைப்பு கண்டனம்

இந்திய மீனவர் சுட்டுக்கொலை : கூட்டமைப்பு கண்டனம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை கண்டறியுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் வேணடுகோள் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீலங்கா கடல் எல்லையில் வைத்து இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் தமிழ மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், இருவர் காயமடைந்திருப்பதாகவும் …

Read More »

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்: ஜனாதிபதி மகளிர் தின வாழ்த்து செய்தி

பெண்களின் பாதுகாப்பை ஜனாதிபதி வாழ்த்து செய்தி

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்: ஜனாதிபதி மகளிர் தின வாழ்த்து செய்தி நாட்டின் நிலையான அபிவிருத்தி முயற்சியில் பெண்களின் தனித்துவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகலாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்தோடு, முகாமைத்துவம் மற்றும் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறிமுறையில் …

Read More »

சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும்

சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை

சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும் சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும் எனவும், கடந்த 2015ஆம் ஆண்டு பிரேரணையை ஒத்ததாகவே புதிய பிரேரணையும் அமையுமெனவும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் ஜெனிவாவில் தெரிவித்துள்ளன. அமெரிக்காவினால் நேற்றையதினம் (செவ்வாய்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை குறித்த நகல்வரைபு தொடர்பான உபகுழுக் கூட்டத்திலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இக்கூட்டத்தில், பிரித்தானியா உள்ளிட்ட மனித உரிமைகள் பேரவையில் அங்கம் …

Read More »

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொல்லப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம்

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் : சிவாஜிலிங்கம்

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொல்லப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களின் உயிரைப் பறிப்பதை இனவெறி தாக்குதலாகவே பார்க்க முடியுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டார். ஈழத் தமிழ் …

Read More »

முதலமைச்சரின் கோரிக்கை வடமாகாண சபையில் மீண்டும் நிராகரிப்பு

முதலமைச்சரின் கோரிக்கை

முதலமைச்சரின் கோரிக்கை வடமாகாண சபையில் மீண்டும் நிராகரிப்பு வட மாகாணத்தின் குடிநீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடமாகாணத்தின் குடிநீர் மற்றும் நீர்வளங்கல் தொடர்பான வடமாகாண சபையின் 84 ஆவது சிறப்பு அமர்வு இன்றைய தினம் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. வட மாகாணத்திற்கான குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் …

Read More »

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது. விசாரணைகளின் சுயாதீனம் மற்றும் பக்கசார்பின்மையை உறுதிப்படுத்த சர்வதேச பங்களிப்பு அவசியம் என குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்கா தொடர்பாக பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு …

Read More »

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு: ஜனாதிபதி

நாட்டில் சமாதானத்தை : ஜனாதிபதி

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு: ஜனாதிபதி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதி இந்தோனேஷியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் …

Read More »

ஹம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா – அமெரிக்கா கூட்டுப்பயிற்சி

ஹம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா - அமெரிக்கா கூட்டுப்பயிற்சி

ஹம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா – அமெரிக்கா கூட்டுப்பயிற்சி அமெரிக்க – ஸ்ரீலங்கா போர்க்கப்பல்கள் இன்று முதல் 10 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன. பசுபிக் ஒத்துழைப்பு – 2017 எனும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக நேற்று அமெரிக்க கடற்படையின் அதிவேக போக்குவரத்து கப்பலான ‘போல் ரிவர்’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இன்று நடைபெறவிருக்கும் ஆரம்ப நிகழ்வில் தென்மாகாண ஆளுநர், தென்மாகாண முதலமைச்சர், தென்மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் செயலர்கள் …

Read More »