சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, இரா.சம்பந்தன் “ நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஒன்று இதுவரை உருவாக்கப்படவில்லை. இதுவே நாட்டில் நிலவிய போருக்கு முக்கிய காரணம். எனவே, […]
Author: தமிழ்மாறன்
அயர்லாந்து நாட்டு பெண்னுக்கு இலங்கையில் நடந்த கதி
அயர்லாந்து நாட்டுப்பெண்ணைக் கடத்தி அவரை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயற்சித்தரை ஆட்டோசாரதியை எல்ல பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். ஆட்டோசாரதியுடன் போராடிதப்பியோடிவந்த அயர்லாந்து நாட்டுப்பெண் கடுங்காயங்களுடன் பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சேர்ந்த இப்பெண் தனது கணவருடன் சுற்றுலாவாசிகளாக எல்லப் பகுதிக்குவந்துள்ளனர். இவர்கள் சுற்றுலாவிடுதியொன்றிற்குச் செல்ல அப்பகுதி ஆட்டோவொன்றில் பயணித்தனர். அவ்வேளையில் ஆட்டோசாரதி தந்திரமாக அயர்லாந்துநாட்டுப் பெண்ணை கடத்திச் செல்லும் நோக்குடன் […]
டெங்கு ஒழிப்புக்கு உதவி: ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆஸி. வெளிவிவகார அமைச்சர் உறுதி
இலங்கையில் டெங்கு நோயை ஒழிப்பதற்கு அவுஸ்திரேலியா உதவும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் இன்று (20) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்தபோது டெங்கு மற்றும் சிறுநீரக […]
ஜி20 மாநாட்டில் டிரம்ப்-புடின் இடையே ரகசிய சந்திப்பு?
ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி-20 எனப்படும் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜூலை மாதம் 7-8 தேதிகளில் ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதல் முறையாக […]
ஆணாக இருந்தவர் பெண்ணாக மாறியதால் திருமண பதிவை ரத்து செய்தது சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியரில் கணவன் பெண்ணாக மாறியதையடுத்து அவர்களின் திருமணத்தை செல்லாது என அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவரின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. எனவே அவர் பிறப்பு உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து கொண்டார். அதை தொடர்ந்து அவர் பெண்ணாக மாறினார். இருந்தும் கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாகவே வாழ்ந்தனர். இந்த நிலையில் […]
கட்சி உறுப்பினர்கள் மத நம்பிக்கையை கைவிட வேண்டும்-சீன கம்யூனிஸ்ட் கட்சி உத்தரவு
சீனாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்களை மத நம்பிக்கையை கைவிடுமாறு உத்தரவிட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. சீனாவின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சனிக்கிழமை குயுஷி பத்திரிக்கையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அக்கட்சியின் விதிமுறைகளை பற்றி கூறப்பட்டிருந்தது. இது குறித்து அக்கட்சியின் உறுப்பினர் வாங் சுயான் கூறுகையில், கட்சி உறுப்பினர்கள் கட்சியின் நலனிற்காக தங்கள் மத […]
புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை ஜனவரியில் வெளியாகும்: பிரதமர்
புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் நடத்தப்பட்ட ‘இலங்கை மக்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, புதிய அரசியல் யாப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ‘ நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புதிய […]
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் கிழக்கு விஜயம்
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் ஜெஃப்ரி டேவிட் ஃபெல்ட்மென் (Jeffrey David Feltman) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போபொல்லாகமவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து கிழக்கு முதல்வர் நஸீர் அஹமட்டைச் சந்தித்து, கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்தோடு, கிழக்கின் சிவில் சமூக அமைப்பினரையும் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது.
உறவுகளுக்காய் மாதக்கணக்கில் வீதியில் போராடும் மக்கள்!
யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர் தாயக பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென தெரிவித்து, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று (புதன்கிழமை) 150 நாட்களை எட்டியுள்ளது. கடந்த 150 நாட்களாக இரவு பகலாக வெயிலிலும் குளிரிலும் தமது உறவுகளுக்காய் ஏங்கித் தவிக்கும் தமது நிலை குறித்து, அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை, தமது வேதனையை […]
பெரும்பான்மை சமூகத்துடன் கூட்டமைப்பிற்கு சரியான தொடா்பாடல் இல்லை: சி.வி.
பெரும்பான்மை சமூகத்துடன் கூட்டமைப்பிற்கு சரியான தொடா்பாடல் இல்லையென குறிப்பிட்டுள்ள வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஏனைய மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகூட சரியாக தெரிவிக்கப்படுவதில்லையென குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் பெரும்பான்மையாக சிங்களம் பேசும் உறுப்பினர்கள் இருக்கும் போது, தமிழில் எமது பிரச்சினைகளை எடுத்துரைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென்றும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின் தலைமைத்துவம் சரியான நடவடிக்கையொன்றை எடுக்க வேண்டுமெனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைகளை […]





