Author: தமிழ்மாறன்

பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு மலையக தலைமைகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுயான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் சிறுபான்மை மக்கள் இந்த […]

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யாவுக்கு இரகசியப் பயணம்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னஇ ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரஷ்யாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன. எனினும்இ இந்தப் பயணம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளைஇ இழுபறிக்குள்ளாகியிருக்கும்இ ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 ரக போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை […]

நல்லிணக்கத்தை குழப்புவது வெளிநாட்டு சக்திகளே – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்காவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே காரணம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் அருண் ஜனார்த்தனனுக்கு அளித்துள்ள சிறப்பு செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தவறான புரிந்துணர்வினாலேயே, 1950களில் சிறிலங்காவில் பிரச்சினைகள் தோன்றின. அதற்கு முன்னர் பிரச்சினைகள் இருக்கவில்லை. வெற்றிபெறுவதற்கும், மக்களின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இனவாத அரசியலை எளிதான வழியாக நோக்கிய […]

நாளை திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம்

மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தைஇ 2016ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது. அதன்பின்னர்இ சிவில் விமானப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 1400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 46 மீற்றர் அகலமும்இ 1066 மீற்றர் நீளமும் […]

இறுதி தீர்மானத்தை எடுக்க ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது சுதந்திரக் கட்சி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா? அல்லது எதிராக வாக்கப்பளிப்பதா? என்று ஆராய்ந்து இறுதித் முடிவெடுக்கும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மீண்டுமம் கூட்டப்படவுள்ளது. கடந்தவாரம் கட்சியின் மத்தியசெயற்குழு இவ்வார ஆரம்பத்தில் கூட்டப்பட்டு சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் உள்ள+ராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, […]

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இலங்கையில் ஒரு அங்குலமேனும் வழங்கமாட்டோம்

இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையில் ஒரு அங்குலம் நிலபரப்பேனும் வழங்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அம்பாந்தோட்டை சீனாவின் கடற்படைமுகாமாக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முற்றுமுழுதான பாதுகாப்பு இலங்கையின் கடற்படை வசமானது. சீனர்கள் அம்பாந்தோட்டையில் அத்துமீறினால் என்ன செய்ய முடியும்? என்றும் சிலர் கேட்கின்றனர். […]

யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியோரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது. கடந்த 19ஆம் நாள்இ யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடந்த விழாவில் சிறிலங்கா அதிபர் பங்கேற்றிருந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட […]

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை – 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இதில் 80இற்கும் அதிகமான ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார […]

ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற காலவரம்புடன் கூடிய உத்தி – கனடா வலியுறுத்தல்

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன்இ தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது. கனடிய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை கனடா வரவேற்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடனான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளை […]

சிறிலங்கா அதிபரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார். இஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரைஇ பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன் வரவேற்றார். அத்துடன் சிறிலங்கா அதிபருக்கு செங்கம்பள மரியாதையும் அளிக்கப்பட்டது. இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறும்இ பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் பிரதம விருந்திரமாக கலந்து கொள்ளவுள்ளார்.