Saturday , November 28 2020
Home / தமிழ்மாறன் (page 4)

தமிழ்மாறன்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது – ஐ.நா நிபுணர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்று உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அவர்இ “ 2015 ஆம் ஆண்டிலிருந்து நான் சிறிலங்காவுடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றேன். பல்வேறு பயணங்களை அங்கு நான் மேற்கொண்டிருக்கின்றேன். கடந்த ஆண்டும் சிறிலங்காவுக்கு சென்றிருந்தேன். அதுதொடர்பான எனது அறிக்கையை எதிர்வரும் செப்ரெம்பர் …

Read More »

அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளியுங்கள் : ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகர் என்ற அரசியல் கைதி, 2008ஆம் ஆண்டு தொடக்கம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையை விதித்திருந்தது. இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி, ஆனந்தசுதாகரின் மனைவி யோகாராணி நோயினால் மரணமானார். இதனால், அவர்களின் இரு குழந்தைகளும் தாயையும் …

Read More »

பிரித்தானிய பிரபுவின் தகவல்கள் பொய்யானவை

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக, பிரித்தானிய பிரபு நசெபி தெரிவித்த கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையென ஐ.நா.வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் பக்க அமர்வாக நடைபெற்ற அமர்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் வெறும் 8000 பேரே உயிரிழந்தனர் என பிரபு நசெபி கடந்த சில மாதங்களுக்கு முன்னர்; தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள்காட்டி, அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் சிங்கள பிரதிநிதியொருவர் நேற்று கேள்வி …

Read More »

காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்

இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட இடங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது, “வடக்கில் யுத்தகாலத்தில் பாதுகாப்பு நிமித்தமாக தமிழர்களின் இடங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த இடங்கள் இன்றுவரை மீள ஒப்படைக்கப்படவில்லை. …

Read More »

அமெரிக்கா செல்ல முற்பட்ட நாமலுக்கு நேர்ந்த கதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவை, எமிரேட்ஸ் எயர்லைன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நாமல் தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய செல்லுபடியாகும் அமெரிக்க விசாவை கொண்டிருந்த போதிலும், நாமலின் விஜயம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உறவினர் ஒருவரது இறுதி …

Read More »

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கவலை

இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தொடர்ந்தும் இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகள், சிறுபான்மையினருக்கெதிரான வன்முறைகள் , மத ரீதியான அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக எங்களது பரிந்துரைகளை ஏற்று, மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களை …

Read More »

பிரதமருக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (புதன்கிழமை) சபாநாயகர் கரு ஜெயசூர்யவிடம் ஒன்றிணைந்த எதிரணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இந்த பிரேரணையில் 4 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இன்று இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

Read More »

கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்காவிடம் கோரினோம்- சுமந்திரன்

ஜெனிவாவில் இன்றைய சிறிலங்கா தொடர்பான அமர்வின் போது, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று, அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பதில் பிரதித் தூதுவர் கெல்லி கியூரியையும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் …

Read More »

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம்

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். விவாதத்தின் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் போல் ஸ்கியூலி, “அவர்களுக்காக நாங்கள் நாட்டை நடத்தவில்லை. ஆனால், வரலாற்று ரீதியான …

Read More »

மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக சகல தரப்புக்களுடனும் இணைந்து வினைத்திறனாக பணியாற்றத் தயார் – இலங்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் பூகோள காலாந்தர மீளாய்வு அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த செயற்பாட்டுக்காக இலங்கை உறுதியான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க தெரிவித்தார். உள்நாட்டு – வெளிநாட்டு ரீதியில் மனித உரிமைகளை மேம்படுத்தும் போதுஇ ஐக்கிய நாடுகள் சபைஇ முறையான நடவடிக்கைகள் என்பனவற்றுடன் தனி அரசுகளுடனும் வினைத்திறனான முறையில் பணியாற்ற இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. கடந்த …

Read More »
You cannot copy content of this page