பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு மலையக தலைமைகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுயான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் சிறுபான்மை மக்கள் இந்த நாட்டிலே பாதுகாக்கப்படுவார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வட, கிழக்கு பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் மலையகத்தில் உள்ள தலைவர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என்றார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →