Author: தமிழ்மாறன்

பிரச்சினைகள் தீர இந்தியா-சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

‘பிரச்சினைகள் தீர இந்தியாவும், சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனராணுவம் ரோடுபோட முயன்றது. அதை இந்தியா தடுத்து நிறுத்தியது. அதை தொடர்ந்து இருநாடுகளும் அங்கு தங்களது ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 50 நாட்களாக பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் லடாக் பகுதியில் புகழ் பெற்ற […]

10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் – பெல்ஜியம் விழாவில் மக்கள் கொண்டாட்டம்

பெல்ஜியம் ஆண்டு விழாவில் மக்கள் 10000 முட்டைகளை கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டாடுவர். இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க […]

கிழக்கு மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்த வேண்டும்: முஹம்மட் நஸீர்

கிழக்கு மாகாணசபையை அதன் காலம் முடிந்ததும் கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். தோப்பூர் பிரதேசத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் கிடைக்காமல் கிழக்கு மாகாணசபையை நீடிக்கும் முடிவினை நல்லாட்சி அரசு எடுத்தமை ஏற்கக்கூடிய […]

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக எவரும் கைநீட்ட முடியாது : சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

“”சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக கைநீட்டுவது தவறான செயற்பாடு என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது”. – இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ரோஹன தி சில்வா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவை பிணைமுறி விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தியமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கைநீட்டுவதும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிப்புரியும் அதிகாரிகளை இழிவுப்படுத்தும் வகையில் […]

விஜயதாசவுக்கு எதிராக 70 பேர் கையொப்பம்?

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் விஜேதாச ராஜபக்ஷ தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், குறித்த பிரேரணையில் 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளை நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டமானது மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவார் எனவும் […]

வடக்கில் வன்முறைகளுக்கு மொழிப்பிரச்சினையே காரணம்: விக்னேஸ்வரன்

வடக்கில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக் காலங்களில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக யாழில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் மொழிப்பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளன. […]

சீனாவின் அடாவடி வர்த்தகம் தொடர்பாக விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் சீனா நடத்திவரும் ’டூப்ளிகேட்’ மற்றும் ’கோல்மால்’ வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் […]

வெள்ளத்தால் சீர்குலைந்த நேபாளத்துக்கு 10 லட்சம் டாலர் நிதியுதவி செய்வதாக சீனா அறிவிப்பு

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சீர்குலைந்துள்ள நேபாள நாட்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்ய சீனா முன்வந்துள்ளது. நேபாள நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் […]

மூன்று மணித்தியாலயங்கள் சிராந்தியிடம் துருவி துருவி விசாரணை

பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முன்னிலையாகி இருந்தார். இன்று காலை 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை விசாரணை நடைபெற்றுள்ளது. சுமார் மூன்று மணித்தியாலயம் நடைபெற்ற இந்த விசாரணையின் போது வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான பல்வேறு கேள்விகள் குற்றப்புலனாய்வு பிரிவில் தொடுக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் பதில் […]

இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு

இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து தலைமையில் நேற்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.