Author: தமிழ்மாறன்

கொழும்பில் இருவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் – அவிழ்த்து விடுகிறார் எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகளை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார் என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். WION என்ற ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அதில், “அமைதி முயற்சிகளில் ஈடுபடுமாறு எமக்கு விடுத்த அழைப்பை அப்போதைய சிறிலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார். அதுபற்றி அப்போது […]

கொரிய தீபகற்பத்தில் போர் கிடையாது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டவட்டம்

கொரிய தீபகற்பத்தில் போருக்கு இடம் இல்லை என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டவட்டமாக கூறினார். வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் புதிய பொருளாதார தடை ஒன்றை விதித்தது. இதற்கு அமெரிக்கா தான் வழிவகுத்தது. இதன்படி வடகொரியா நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, ஈயம், மீன், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாக, வடகொரிய நாட்டுக்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி […]

பிரெக்சிட் எதிரொலி: ஐரோப்பிய யூனியன் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டனுக்குள் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள பிறநாட்டினர் நுழைய விசா தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. இனி வரும்காலங்களில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மக்கள் பிரிட்டனுக்குள் […]

ஜனாதிபதி மைத்திரியிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தபோது அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை எனவும் இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் குறித்து தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பில் நேற்றைய தினம் (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக […]

2020 வரை தேசிய அரசு தொடரும்: சரத் அமுனுகம

பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் துரிதப்படுத்தும் வகையில் தேசிய பொருளாதார சபையொன்றை அமைப்பதற்கு தேசிய அரசின் பிரதான இரண்டு கட்சிகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் சரத் அமுனுகம கூறியுள்ளார். அத்துடன், இவ்விரு கட்சிகளுக்குமிடையிலுள்ள பொருளாதார முரண்பாடுகளையும், கொள்கை முரண்பாடுகளையும் தீர்த்துக்கொள்ளும் வகையில் தேசிய பொருளாதார சபை உருவாக்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான […]

வடக்கில் எதற்கெடுத்தாலும் ‘புலி’ எனப் பொய்ப்பிரசாரம்!

வடக்கு சமூகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளைக் காரணங்காட்டி எதற்கெடுத்தாலும் புலிகள் மீளத் தோற்றம் பெறுகின்றனர் எனப் பொய்ப்பிரசாரத்தை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், தேர்தல்களைப் பிற்போடும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை. மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்றே கூறுகின்றோம். தேர்தலைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிற்போட நடவடிக்கை எடுத்துவருவதாக […]

மோட்டார் சைக்கிள், இணையம் மீதான வரி குறைப்பு

இணையச் சேவைகளுக்காக அறவிடப்பட்டு வந்த 10% தொலைத்தொடர்பு வரியை முற்றாக நீக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த வரி குறைப்பு செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் அமுல் படுத்தப்படும். இதேவேளை, சிறிய லொறி மற்றும் கப் (Cab) ரக வாகனங்கள் மீதான வரியை 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 இலட்சமாக உள்ள குறித்த வரி 7 இலட்சமாக குறைக்கப்படவுள்ளது. மேலும் 150 CC ஐ […]

இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்

கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். அதேவேளை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், வரும் 21ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். இந்தநிலையில், […]

மைத்திரியின் ஆட்சியில் இனவெறியர்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது – பெரியசாமி பிரதீபன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டு மக்களுக்கு கடந்த அரசாங்கத்தைவிட தற்போது முன்னூதரணமாக செயற்படுவதாக கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆட்சியில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராபட்ச ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக மக்களுக்கு சேவையாற்றினார். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர […]

ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை: புதிய வெளிவிவகார அமைச்சர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைத்த யோசனைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இலங்கையின் நற்பெயரையும், நன்மதிப்பையும் சர்வதேச மட்டத்தில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் தூதுவராலயம், உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் கன்சியூலர் காரியாலயங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். இன்று காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவேளையில் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். […]