தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ அசிஸ் போதைப்பொருளை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கடத்தல்காரர்களை பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் இருந்து அசிஸ் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு சிலர் கடத்த முயல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]
Author: தமிழ்மாறன்
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெவில்லையா – உடனடியாக அறிவியுங்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால், உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி பூர்த்தி அடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வாக்காளர் இடாப்பை பார்வையிட முடியும். இணையத்தளத்தின் முகவரி : www.elections.gov.lk
ஆசியாவின் தலைசிறந்த சுற்றுலா வலயமாக காலி – பிரதமர்
காலி மாவட்டம் ஆசியாவின் சிறந்த சுற்றுலா வலயமாக தரமுயர்த்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேசத்தில் நான்காயிரம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் சகலருக்கும் காணி உரிமைகள் உறுதி செய்யப்படும். களுத்துறையில் 800 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் கைத்தொழில் பேட்டை நிறுவப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் […]
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தில் தான் நீதியும், குணப்படுத்தல் வசதிகளும் உள்ளன என்பது முக்கியமாகும். வேறு எதுவும் அனைத்துலக சமூகத்தினால் ஏற்றுக் […]
ஷங்காய் நகரம் போல தென்னிலங்கையை மாற்றுவோம்- சீனத் தூதுவரின் சபதம்
அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு ஏற்ற வகையில், சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்று நடந்த- சீனாவின் கொடையில், ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை கருவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சீன தூதுவர்,இவ்வாறு குறிப்பிட்டார். “சீனாவின் மிகச் சிறப்பான நண்பன் தான் சிறிலங்கா. இரண்டு நாடுகளுக்கும் […]
20ஆவது திருத்தத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தும் இ.தொ.கா.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளூராட்சிமன்றத் திருத்தச் சட்டமூலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் யோசனைகள் புறக்கணிக்கப்பட்டால், அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார். சௌமிய பவனில் நடைபெற்ற தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். புதிய எல்லை மீள் நிர்ணயம் எந்தவகையிலும் மலையக மக்களின் அரசியல் ரீதியிலான உரிமைகளை பாதுகாப்பதாக தெரியவில்லை. தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையில் இருக்கும் சில அனுகூலங்கள் புதிய கலப்புத் […]
அமெரிக்கா, தென்கொரியா இன்று கூட்டு போர் பயிற்சி: வடகொரியா எச்சரிக்கை
கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இன்று நடத்தும் கூட்டு போர்ப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “அந்த நாட்டின் மீதான பிரச்சினையில் […]
பாக்டீரியாவை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன்: நாசா புதிய திட்டம்
உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் மூலம் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்த போவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கனடா வாழ் அமெரிக்கரான வர்த்தகர் எல்கான் முஸ்க் செவ்வாய் […]
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை விசாரணைக்கு சீனா அதிருப்தி
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் அமெரிக்கா நடத்திவரும் முறைகேடான வர்த்தக நடைமுறைகள் தொடர்பான விசாரணைக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும் ராஜதந்திர முயற்சிகள் பயனற்றுப் […]
கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து கூட்டு எதிர்க்கட்சியின் எம்.பிக்களை விலைக்கு வாங்க முயற்சி
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்கு இழுக்க கோடிக்கணக்கில் பணத்தையும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசாங்கத்திற்கு எங்கிருந்து கோடிக்கணக்கில் பணம் கிடைத்து என கேள்வி எழுப்பியுள்ள அவர், பிணை முறிப்பத்திர மோசடியில் கிடைத்த பணமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது எனவும் கூறியுள்ளார். உடுகம்பலையில் உள்ள தனது வீட்டில் மினுவங்கொடை […]





