Author: தமிழ்மாறன்

இராணுவக் கப்பல்களுக்கு - பிரதமர் ரணில்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல் இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஸ்ரீலங்கா தயாரென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கான சிறந்த வழி இதில் பயணிக்கும் இராணுவக் கப்பல்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றை தயாரிப்பது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய […]

நீதிபதி நியமிப்பு-ஜீ.எல். பீரிஸ்

நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம்

நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியாக, சமீபத்தில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட வழக்கறிஞர் இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்து, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், விமர்சித்துள்ளமை, இனத்துவேஷ காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துள்ளது. நீதிபதி கண்ணனின் நியமனத்தை குறித்தும், அதனை வழங்கிய ஜனாதிபதியைப் பற்றியும் அவதூறுகள் ஏற்படும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். […]

நில மீட்பு போராட்டம் - ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்

நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்

நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் கலந்துரையாடப்பட்டு முடிவுக்கு வலியுறுத்தப்படும் என, யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம், எந்த முடிவுமின்றித் தொடர்வது மனவருத்தம் தருவதாக ஆயர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பில் விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் […]

இயக்குநர் எலைன் பியர்சன்

சர்வதேச நீதிபதிகள் அவசியம் – இயக்குநர் எலைன் பியர்சன்

சர்வதேச நீதிபதிகள் அவசியம் – இயக்குநர் எலைன் பியர்சன் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்கற்றங்கள் குறித்த விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளை பயன்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலியாவிற்கான இயக்குநர் எலைன் பியர்சன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கயைானது ஐ.நா தீர்மானத்தின் தேசிய கூறுகளை நோக்கி முன்னேற்றத்தை எட்டியுள்ளது. எனினும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் சர்வதேச […]

காணிகளுக்குள் கால் பதிக்கும்

காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம்

காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக […]

யாழில் விழிப்புணர்வு

யாழில் விழிப்புணர்வு சிரமதான நடைபவனி

யாழில் விழிப்புணர்வு சிரமதான நடைபவனி தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்’ எனும் தொனிப்பொருளில் பொலித்தீன் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு சிரமதான நடைபவனி இன்று யாழ். நகரில் இடம்பெற்றது. குறித்த விழிப்புணர்வு பேரணியில் சுகாதார உத்தியோகத்தர்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டிருந்தனர். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் அகில இலங்கை சைவ மகா சபை ஆகியன ஒன்றிணைந்து குறித்த சிரமதான பேரணியை […]

மோடி இலங்கை வருகை

மோடி இலங்கை வருகை

மோடி இலங்கை வருகை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி விசாகப் பண்டிகை நிகழ்வில் கலந்துக் கொள்ளும் வகையில் எதிர்வரும் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாகப் பண்டிகை நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய […]

சுமந்திரன்

ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன்

ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன் திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது “ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கிஇ ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே […]

இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம் இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (சனிக்கிழமை) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளார். நாளை இலங்கைவரும் வெளியுறவு செயலாளர் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விஜயத்தின் போது இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள், திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என்பன குறித்து […]

கேப்பாபுலவு மக்களுடன்

கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்

கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள் கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காகவே தாம் இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் […]