Author: குமார்

இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் […]

திருவிடந்தை சர்வதேச ராணுவ தளவாடக் கண்காட்சியைக் காணக் குவியும் பொதுமக்கள்

தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தை சர்வதே ராணுவ தளவாடக் கண்காட்சியைக் காண அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். கடந்த 11- ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆதார் கார்டு பான்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டியபிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் […]

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிதாமகனும், இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலை பீடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலையில் அங்கு […]

காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி – H. ராஜா சாடல்

காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஹெச்.ராஜா, ஸ்டாலினின் குடும்பமே தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹமாஸ் போராளி பலி

ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் போராளி ஒருவர் உயிரிழந்தார்  பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக இருக்கிறது. இந்த போராளிகள், பாலஸ்தீன மக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்று விளங்குகின்றனர்.இந்த நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் உருவானதின் 70-வது […]

சோமாலியாவின் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் – 5 ரசிகர்கள் பலி

சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும்  கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனை […]

ஐ.பி.எல். போட்டி – ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் ஏழாவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர். ஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், […]

பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா?

TREDY FOODS உடன் சேர்ந்து கோடையை கொண்டாடுவோம் பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா? வெயில் காலத்தில உப்பு, புளி, காரம் அதிகம் சேர்த்துக்க வேண்டாம்னு பெரியவங்க சொல்வாங்க. காரணம் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். வெயிலை நினைச்சு கவலை வேண்டாம். மழையை வரவேற்பது போலவே வெயிலையும் கொண்டாடணும் காரணம் இயற்கையின் கொடைகளான நுங்கு, இளநீர், மோர் மற்றும் சிறுதானிய கூழ் வகைகள் ஆகியவற்றின் சங்கமமே இதற்கு காரணம். வெயில் காலத்தில் […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விருதுநகரில் சரவணன் சுரேஷ் என்பவர் தீக்குளிப்பு

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில், விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சரவணன் சுரேஷ்(வயது 50) என்ற நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்குளித்ததில் […]

வைகோ உருவ பொம்மையை எரித்து பா.ஜனதா போராட்டம்

பா.ஜனதா இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தலைமை தாங்கினார். மாநில இளைஞ ரணி பொதுச் செயலாளர் வசந்தராஜன், மாவட்ட தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டு வைகோவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். உடனே அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வசந்தராஜன் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டம் […]