Author: குமார்

ஈராக் அரசுப் படையினரின் வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி பலி

ஈராக் அரசுப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் அரசுப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த முக்கிய நகரமான மொசூல் நகரை கடந்த வாரத்தில் மீட்ட ஈராக் மற்றும் அமெரிக்கா வீரர்கள் […]

நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி மொழி எழுதப்பட்டிருப்பதில் திமுக இரட்டை வேட்டை போடுகிறது – மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கண்டனம்

நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி மொழி எழுதப்பட்டிருப்பதில் திமுக இரட்டை வேட்டை போடுகிறது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் முதலில் இந்தி மொழியில் தான் ஊர்ப்பெயர் எழுதப்பட்டிருக்கும். அடுத்து ஆங்கிலம், அதனையடுத்தே தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கும். மத்தியில் பாஜக அரசு வந்த பிறகு தான் இவ்வாறு எழுதப்படுகிறது என்று திமுக குற்றம்சாட்டியது. இதுகுறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், […]

விவசாயிகள் பிரச்சினை குறித்து நாங்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம் -தம்பிதுரை உறுதி

விவசாயிகள் பிரச்சினை குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். கண்டிப்பாக இனியும் தொடர்ந்து பேசுவோம் என தம்பிதுரை உறுதி அளித்துள்ளார். தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய […]

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐ.ஐ.டி. தேர்வு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில், சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2017-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 8-வது இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் பெங்களூர் […]

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவொற்றியூரில் மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. முறையாக தேர்தல் நடக்க வேண்டும். இந்திய தேர்தல் […]

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, […]

கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்த ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் பிரசாந்த் பூஷன் மீது ராஜஸ்தான் காவல்துறையிடம் புகார்

கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்த ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் பிரசாந்த் பூஷன் மீது ராஜஸ்தான் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரோமியோ எதிர்பு படையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் ஆம் ஆத்மி தலைவரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் டுவிட் செய்திருந்தார். அதில், “ரோமியோ ஒரே ஒரு […]

ஸ்ரீநகர்: பன்தாசவுக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துணை ராணுவப் படை வீரர்கள் ஆறு பேர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநில கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகருக்குட்பட்ட பன்தாசவுக் பகுதியில் இன்று துணை ராணுவப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் உள்ளிட்ட இரு பாராளுமன்ற தொகுதிகளில் வரும் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப் படையை சேர்ந்த சில வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஒரு […]

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி: 7 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா-கிஸ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலச்சரிவு குறித்து போலீஸ் உயரதிகாரி சந்தீப் வான்சீர் கூறுகையில் “டிராப்ஷலா என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்க முயன்றபோது […]

பெங்களூரில் தடை செய்யப்பட்ட ரூ.9 கோடி பணத்துடன் 14 பேர் கைது: பெங்களூர் போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் ரூ.9 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அவற்றை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களாக […]