இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் இனி மாதம் தோறும் 12 முறை ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மாதம் 6 முறை மட்டுமே ஆன் லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »தலாய் லாமாவின் 1300 வருட பழமையான அரண்மனையை சீரமைக்கிறது சீன அரசு
திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள பொட்டலா அரண்மனை, 1959-ம் ஆண்டு வரையில் தலாய் லாமாவின் பிரதம வசிப்பிடமாக இருந்தது. இப்போது இது நூதன காட்சிச்சாலையாகவும் உலகப் பாரம்பரியக் களமாகவும் உள்ளது. அரண்மனை 3,700 மீட்டர் (12,100 அடி) உயரத்தில், லகாசா பள்ளத்தாக்கின் மத்தியில் சிவப்பு மலையின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை 1694-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதற்கு சுமார் 45 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த அரண்மனை “யு.எஸ்.ஏ டுடே” செய்தித்தாளால் புதிய …
Read More »இந்தோனேசியாவில் 25 அடி ராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார். அப்போது 26 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது. அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது …
Read More »சர்வதேச உஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் பூஜா கடியன் இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்று தந்தார்.
உஷூ மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும். பன்னாட்டு உஷூ கூட்டமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் உஷூ போட்டிகளை நடத்துகின்றது. முதல் சர்வதேச போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் 1991-ம் ஆண்டு நடைபெற்றன. உஷூ போட்டிகளில் டயோலு மற்றும் சான்டா என இரண்டு வடிவங்கள் உள்ளன. இந்நிலையில், 14-வது சர்வதேச உஷூ போட்டிகள் ரஷியாவின் கஸான் நகரில் கடந்த …
Read More »வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 512 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.58 புள்ளிகள் உயர்ந்து 31,749.29 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், சுகாதாரம், ஆட்டோ, உலோகம் மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி …
Read More »இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம் – : அன்னா ஹசாரே அறிவுரை
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அன்னா ஹசாரே கூறியதாவது: இளைஞர்கள் யாரும் என்னை பின்பற்றி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டாம். திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது சுலபமல்ல. இது கூர்மையான வாளின் மீது நடந்து செல்வதை விட கடினமானது. எனவே இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ வேண்டும். தூய்மையான எண்ணங்களும், செயல்களும் இருக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் திருமண …
Read More »தமிழக புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,5) சென்னை வருகிறார்.
தமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம் முடிந்த பின், மஹாராஷ்டிர மாநிலம் கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 30ம் தேதி(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(அக்.,5) பிற்பகல் சென்னை வருகிறார். கிண்டி ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், …
Read More »லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: ஐபோன் மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த பெண்மணி
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 59 பேர் பிரதாபமாக உயிரிழந்ததோடு 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் காயமுற்றோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் சார்ந்த விசாரணை ஒருபுறம் நடைபெற்று வருகிறது. அதேவேளையில், சம்பவத்தில் அரங்கேறிய வீரதீர செயல்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. அந்த வகையில் துப்பாக்கி …
Read More »இந்தியாவின் பிரதமராக பயங்கரவாதி நரேந்திர மோடி ஆட்சி செய்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கருத்து
மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சமீபத்தில் பேசியபோது பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அந்த நாடு, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது என அவர் கூறினார். அவர் அவ்வாறு கூறியதற்கு பதிலடி தருவதுபோல, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கருத்து வெளியிட்டுள்ளார். அவர், ஜியோ டி.வி.யில் ‘டாக் ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, “இந்த நேரத்தில் அங்கு (இந்தியா) ஒரு …
Read More »ரூ.149க்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ
புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 செலுத்தும் போது அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.149 திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி புதிய மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது. எனினும் இந்த திட்டத்தில் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா மட்டுமே …
Read More »