Author: தமிழவன்

மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற கணவன்!!

ஜிம்பாப்வேவில் தகாத தொழிலில் ஈடுபடுவதாக மனைவியை சந்தேகப்பட்ட கணவர், கோபத்தில் மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் உள்ள குபிமா என்ற கிராமத்தில் பாஸ்மோர் ஜம்ஹரோ – தொரோதி தஸ்போரா தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவருக்கு தன் மனைவி விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சந்தேகம் வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சணடை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொருமையை இழந்த மனைவி கணவரை பிரிந்து […]

சட்டப்பேரவை லைவ்க்கு அஞ்சுகிறதா ஆளும் அரசு?

நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிரது, அதே போல ஆந்திராவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. எமவே, தமிழக சட்டசபை நிகழ்வுகளும் ஒளிபரப்ப படவெண்டும் என கோரிக்கை 2012 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. ஆனால், […]

அதிமுக இருக்கும் போது எதற்கு தனிக்கட்சி?

தனிக்கட்சி தொடங்கும் திட்டமில்லை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களை நிர்வாகிகள் பதவிகளிலிருந்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு நீக்கியது. எனவே, அவர்களுக்கு பதவி கொடுக்கும் வகையில், டிடிவி தினகரன் பேரவை அல்லது தனிக்கட்சி […]

தாயைக் கொன்ற பேராசிரியர்!

உடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ […]

இன்று, நாளை மின்சார ரயில்கள் ரத்து

போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது சென்னை மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படமால் உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே சென்னையில் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக […]

அரங்கத்தையே அதிர வைத்த அந்த வார்த்தை!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் ஊடகங்களில் ரஜினி குறித்தான செய்திகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவர் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தை அதிர வைத்தது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை நட்சத்திரங்கள் இணைந்து நடத்தும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார். மலேசிய சென்றுள்ள அவர் நடிகர்கள் விளையாட உள்ள நட்சத்திர கிரிக்கெட்டையும் கண்டுகளிக்க உள்ளார். இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான பல கேள்விகளை […]

சொந்த நாட்டின் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா!

அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அணுகுண்டு சோதனை மூலம் மிரட்டி வரும் வடகொரியா, மூன்றாம் உலகப்போர் வந்தால் அதற்கு காரணமாக இருக்கும் நாடு என்று கூறப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐநாவின் எச்சரிக்கையை மீறி அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா சமீபத்தில் Hwasong-12 என்ற ஏவுகணையின் சோதனையை நடத்தியபோது அந்த ஏவுகணை வடகொரிய நகரமான டோக்சோன் என்ற நகரத்தில் விழுந்து பெரும் சேதத்தை உண்டாக்கியுள்ளதாக […]

குடாநாட்டில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு!

முதி­யோர் இல்­லங்­க­ளில் சேர்க்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்­ளது. கைதடி அரச முதி­யோர் இல்­லத்­தில் கடந்த ஆண்­டில் மட்­டும் 78 முதி­ய­வர்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் கூடு­த­லா­னோர் ஆண்­கள் என இல்ல அத்­தி­யட்­ச­கர் த.கிரு­பா­க­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: ஆண் முதி­ய­வர்­கள் 44பேரும் பெண் முதி­ய­வர்­கள் 34பேரும் கடந்த ஆண்­டில் இல்­லத்­தில் இணைக்­கப் பட்­ட­னர். கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்­கம் 2017ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் சேர்க்­கப்­பட்ட முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்­கையை ஒப்­பிட்டு பார்க்­கும்­போது […]

வட்டுவாகலில் இறால் சீசன் ஆரம்பம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் வட்­டு­வா­கல் மற்­றும் நாயாற்­றுப் பகுதி ஆற்­றுத்­தொ­டு­வா­யில் இறால் பிடிக்­கும் பருவம் தொடங்­கி­யுள்­ளது. மீன­வர்­கள் இரவு பக­லாக இறால் பிடிக்­கும் தொழி­லில் ஈடு­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. வட்­டு­வா­கல், நந்­திக்­க­டல் ஏரி­க­ளில் பிடிக்­கப்­ப­டும் இறால்­க­ளுக்கு மக்­கள் மத்­தி­யில் தனிக்­கி­ராக்கி உண்டு. ஆனால் இப்­போது அவற்றை மக்­க­ளால் ருசிக்க முடி­ய­வில்லை. கார­ணம் வெளி­நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வ­தற்­காகக் கொண்­டு­செல்­லப்­ப­டு­கின்­றன. இந்­த­நி­லை­யில், மாவட்­டத்­தி­லுள்ள களப்­பு­க­ளில் இறால் மற்­றும் மீன்­பி­டித் தொழில் செய்­ய­வ­தற்கு அனு­மதி பெற்­றுக்­கொள்­ள­வது […]

நிதி திரட்டியவர்கள் மீது விசாரணை!!

தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டியமை தொடர்பில் 13 பேர் சுவிற்சர்லாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 13 பேரும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினர் கள். சுவிற்சர்லாந்து, ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியுள்ளனர். சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக […]