Author: மலரவன்

தமிழ் மக்கள் ஏற்காத தீர்வை ஒருபோதும் கூட்டமைப்பு ஆதரிக்காது!

“தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது. தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யும் தீர்வை அடைவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் ஆணித்தரமாகத் தெரிவித்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைப் பாராட்டுகின்றேன். அரசியல் அமைப்பு முயற்சி வெற்றிபெற எமது ஆசிகள் என்றைக்கும் […]

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு: தமிழரசுக் கட்சியுடன் ரெலோ நாளை முக்கிய பேச்சு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துடன் பேசுவதற்கு ரெலோ அமைப்பு தீர்மானித்திருந்தது. தமிழரசுக் கட்சியிடம் அதற்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது

​மேலும் ஒரு பலாத்கார சாமியார் கைது!

தினமும் நாளிதழில்களில் ராசிக்குறிப்புகள் வருவதைப் போல போலி சாமியார்கள் பெண்களுக்கு எதிராக செய்யும் பலாத்கார குற்றங்கள் வெளியாகி வருகின்றன. சமீப நாட்களில் மிக அதிகமாக அதிகரித்திருக்கும் இந்த குற்றங்கள் ஆன்மீகத்தையும், பெண்கள் குறித்த சமூக மனநிலையையும் இழிவாக்குகிறது. ஹரியான குர்மீத், குஜராத் ஆஷ்ரம் பாபு போன்ற பலாத்கார சாமியார்களின் வரிசையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் ஆசிரமத்தில் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சீதாப்பூரில் […]

மாரி-2 திரைப்படத்தில் ஹீரோயினாகும் சாய் பல்லவி!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் மாரி-2 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிப்பில் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாரி’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் இயக்குகிறார். இயக்குநர் பாலாஜி மோகன் அவருடைய ட்விட்டர் […]

குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்

100 வீதம் விடுதலை சாத்தியமில்லை என்று அரசியல் ஆய்வாளர்களால் கூறப்பட்ட குர்தீஸ் மக்கள் இன்று சுதந்திர விடுதலை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அது அவர்களின் மிகப்பெரிய முயற்சிகளின் வெற்றியாகும். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகால வரலாற்றுப்பாரம்பரியம் கொண்ட குர்தீஸ் இன மக்களின் தேசம் நான்கு துண்டுகளாக ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளால் துண்டாடப்பட்டிருக்கிறது. இதை லாண்ட் லொக் (Land Log )என அழைப்பார்கள். இதுபோல் ஆசியாவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் என்பவையும்காணப்படுகிறது. […]

மாகாண ஆளுநர்களை சந்திக்கிறார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மாகாண சபைகளின் ஆளுநர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது. ஆயுட்காலம் முடிவடைகின்ற கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய ஆகிய மாகாண சபைகளின் ஆட்சியதிகாரத்தை ஆளுநர்களிடம் ஒப்படைப்பதே அரசின் திட்டமாக இருந்தது. எனினும், தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு   ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பில் அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக இறுதி முடிவெதையும் எடுக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுநர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் பிரதமரும் […]

’20’ குறித்து உரிய முடிவு! – அரசு தெரிவிப்பு

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல  சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்கீழ் கட்டளை மீதான விவாதம் ஆரம்பமானது. இதில் உரையாற்றிய தினேஷ்  குணவர்தன எம்.பி.,”நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்திலிருந்து 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்னமும் அகற்றபடவில்லை. இது […]

ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பு: முறியடிக்க பொது எதிரணி வியூகம்! – தேசிய கூட்டணி அமைக்க மஹிந்த ஒப்புதல்

புதிய அரசமைப்பு தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே அரசின் திட்டமாக இருப்பதால் அந்த முயற்சியை தோற்கடிப்பதற்காக தேசிய கூட்டணியொன்றை அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் கூட்டு எதிரணியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர். பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்ற […]

குர்திஸ்தான் மலர்கிறது!

குர்திஷ் மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுவாக எழுப்பியிருக்கிறார்கள். பொது வாக்கெடுப்பில் தனிநாடு அமைய வேண்டும் என 92% மக்கள் வாக்களித்துள்ளனர். வடக்கு ஈராக் மாநிலமான குர்திஸ்தான் மாநில அரசு நடத்திய குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பில், அம்மாநில வாக்களர்களான 52 லட்சம் பேரில் 78% மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 92% பேர் குர்திஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். குருது மக்களின் நிலப்பகுதி துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, […]

ராஜபக்சே மகனையும் கவர்ந்த மெர்சல் டீசர், என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்த டீசர் தற்போது வரை இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகன் மெர்சல் படத்தை பார்க்க ஆர்வமாகவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இதில் தான் ரகுமானின் இசையை கேட்க மிகவும் ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Really enjoyed the #Mersal teaser. Looking forward to watching the film […]