புதிய அரசமைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து தெளிவுபடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், அந்தத் திட்டத்தை தற்போது அது கைவிட்டுள்ளது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைமீது அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், நாட்டில் நல்லிணக்கம் நிலவுவதற்கும் புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் […]
Author: மலரவன்
இலங்கையை இறுக்கிப்பிடிக்கத் தயாராகிறது ஐ.நா.!
உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு ஆமைவேகத்தைக் கடைபிடித்துவருவதால் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரால் இன்றைய தினம், இலங்கை அரசுக்குக் கடுந்தொனியிலான செய்தியொன்று விடுக்கப்படும் என்றும், அதுவே ஐ.நாவின் இறுதி எச்சரிக்கையாகக்கூட அமையலாம் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், சமூக ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டுவார கால பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள […]
மைத்திரியின் செயல் அரசியல் கைதிகளின் சிக்கலை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி!
“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து பெரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தும்கூட, அவர்கள் சார்ந்த பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மாறாக ஏனைய சிலரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியதானது அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் திசை திருப்பும் மற்றும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியேயாகும்.” – இவ்வாறு பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து விடுத்துள்ள ஊடக […]
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு காலதாமதம்! – பப்லோவிடம் ஒப்புக்கொண்டார் சபாநாயகர்
“மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளமை உண்மைதான்.” – இவ்வாறு உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்பிடம் நேரில் ஒப்புக்கொண் டார் சபாநாயகர் கரு ஜயசூரிய. இரண்டு வாரகால உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ […]
அதிகாரப் பகிர்வு மக்களுக்கே! – அரசியல்வாதிகளுக்கு அல்ல என வவுனியாவில் மைத்திரி தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)
“அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல. அது மக்களைப் பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டைப் பிளவுபடுத்துகின்ற – துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக்கூடாது என்றும் கூறினார். வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் […]
வவுனியாவில் வித்தியாவின் வீட்டுக்குச் சென்றார் ஜனாதிபதி! – நன்றி தெரிவித்தார் தாய் (படங்கள் இணைப்பு)
வவுனியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சியின் முடிவில் யாழ்.புங்குடுதீவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருடன் கலந்துரையாடினார். கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் வித்தியா படுகொலைசெய்யப்பட்ட நிலையில், அவரின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு இதன்போது நன்றி தெரிவித்தார். […]
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்யுங்கள் (படங்கள் இணைப்பு)
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோவிடம் சம்பந்தன் அழுத்தம் * படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் * காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வடக்கு, கிழக்கில் நிறுவப்பட வேண்டும் * தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருக்க முடியாது * நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு ஒரு சிலர் பிரயத்தனம் “நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை […]
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழு வவுனியாவில்
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவானது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவை சென்றடைந்துள்ளது ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில […]
வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வவுனியாவுக்கான விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுப்பு போடப்பட்டுள்ளதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமாலான்சவினதும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினதும் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று […]
பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவித்தல் !
தமிழீழத் தேசப்புதல்வர்களை போற்றி வணங்கும் புனித நாள் மாவீரர் தேசிய நாள். தமிழீழத் தேசவிடுதலைப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கியா மாவீரர்களின் பெற்றோர் உறவினர் உரித்துடையோர் மாவீரர் தேசிய நாள் நிகழ்வில் வணக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சின் அலுவலகத்துடன் அல்லது பிரான்சு மாவீரர் பணிமனையுடன் எதிர்வரும் 10.11.2017 இற்கு முன்னர் தொடர்பு கொண்டு உங்கள் உரித்துடையவரின் நிழல் படம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு […]





