முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை உள்ளடக்கி மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்படை வலயத்துக்குட்பட்ட கோத்தபாய கடற்படை கப்பல் என்னும் கடற்படை தளத்துக்கு இன்றையதினம் நிரந்தரமாக காணி சுவீகரிப்பு பணிகள் நடைபெறவிருந்த நிலையில், குறித்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் கடற்படை முகாம் அமைக்க நிரந்தரமாக காணி சுவீகரிப்பு அளவீடுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் கடந்த வர்த்தமானி […]
Author: மலரவன்
வடமாகாண தொண்டராசிரியர்கள் போராட்டத்தில்.!
வடமாகாண தொண்டராசிரியர்கள் சிலர் இன்றைய தினம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் நேர்முகத் தேர்வின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 182 பேருடைய பெயர்கள் வெளியிடப்பட்டும் இதுவரை ஆசியரியர் நியமனங்கள் வழங்கப்படாததை அடுத்தே அவர்கள் இப் போராட்டத்தினை நடத்தினர். மாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று. அதில் 182 பேர் ஆசியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டனர். […]
தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி ராக்கி என்ற வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் கோபுரத்தின் மீது இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் மூலம் தனது மிரட்டல் காட்சியை நேரலை செய்தார்.தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் அவருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி […]
யாழில் தொடர்கிறது பெரும் பதற்றம்!
யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞரொருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது. யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞரொருவர் படுகாயமடைந்திருந்தார். குறித்த இளைஞர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது 24) என்பவரே உயிரிழந்தவராவார். இந்தச் […]
உண்ணாவிரதக் கைதிகள் பலவந்தமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்ப்பு
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் பலவந்தமாகச் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு இடமாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 25ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளான ம.சுலக்ஷன், க.தர்ஷன், இ.திருவருள் மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவர்களது உடல் பலவீனமடைந்து அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் […]
தேயிலை மலையை முறையாக பராமரிக்க கோரி தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் செம்புவத்தை தோட்ட தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து அத்தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை தோட்ட காரியாலயத்திற்கு முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்டிரதன் செம்புவத்தை தேயிலை மலை சில வருட காலமாக பராமரிக்க படாமல் காடாக மாறியிருப்பதால் தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் பயத்தால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் […]
பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பாலைச் சோலை பிரதேசத்தில் பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை நேற்று ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் கடந்த 21ஆம் திகதி சிறுமியை தந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டடையடுத்து சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் […]
கேரள கஞ்சாவுடன் பெண் கைது
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையில் இயக்கச்சி பகுதியில் வைத்து 32 வயதுடைய குறித்த பெண் 4.70 கிலோ கிராம் கஞ்சாவுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 9600 சம்பவங்கள் கடந்த வருடம் பதிவாகியுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரிவித்தார். றூவிஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு அட்டாளைச்சேனை ஒஸ்றா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்களில் 70 வீதமானவை குடும்ப உறவினர்களினாலேயே […]
யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி! (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுப் பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினால் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது – 24) என்ற […]





