ரசிகர் ஒருவரின் பாராட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை கடும் கோபமடையச் செய்திருக்கிறது. இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இவ்வாரம் வெற்றி, தோல்வியின்றி நிறைவடைந்தது. எனினும் 1-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா பெற்றுக்கொண்டது. மொத்த மூன்று போட்டிகளிலும் பந்து வீசிய ஜடேஜா, பத்து விக்கட்களை வீழ்த்தியிருந்தார். அத்துடன் நாற்பது ஓட்டங்களையும் பெற்றிருந்தார். போட்டியின் பின் ரசிகர் ஒருவர் ஜடேஜாவைப் பார்த்து, “அஜய் (!) […]
Author: மலரவன்
வவுனியாவில் விழிப்புணர்வு வாகனப் பேரணி
வவுனியாவில் “பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்” எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு வாகன பேரணியும் பொது மக்களிடம் கையச்சுப் பெறும் நிகழ்வும் நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய அபிவிருத்தி நிதியம், ஜெர்மன் நிதி வழங்கும் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்தது. பேரணியின் நிகழ்வில் பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான மையை பூசி கையச்சு பதியும் நிகழ்வும் வாகனத்தைக் கழுவி சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ள கூடாது
“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்
நான் ஆயிரம் தடவை இந்தியாவுக்குச் சென்று வந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதற்காக இந்தியா சென்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துக் கூறினார். “அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸூடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவீர்கள் […]
யாழில் வாள்வெட்டுச் சம்பவம்
யாழில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய ஆறு போ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனா். குறித்த வாள்வெட்டு குழுவினர் யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கு தயாரகி இருப்பதாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள் ஒரு தலைக் காதல் விவகாரம் காரணமாகவே வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர் என ஆரம்ப கட்ட […]
ஜெ.வை நாங்கள் பார்க்கவே இல்லை
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் 4 பேர் பார்க்கவே இல்லை என வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது. விசாரணையை தொடங்கியுள்ள ஆறுமுகச்சாமி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க 60க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். இந்நிலையில், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]
ஆணுறை விளம்பரத்தில் பிரபல நடிகை; வைரல் புகைப்படம்
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது ராக்கி சாவந்த் வழக்கம். பாலிவுட்டில் அவ்வப்போது பிரச்சனையில் மாட்டி கொள்ளும் ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளது, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்துயுள்ளது. இவ்வாறு நடிப்பது மக்களின் கவனத்தை ஈர்க்கப்பதற்காகவே என்று கூறப்படுகிறது. விளம்பரத்தில் ராக்கி சாவந்த் ரோஸ் நிற உடையில் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். படுக்கையின் மீது அவர் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி […]
தேர்தல் அதிகாரிக்கு உதவியாக ஓபிஎஸ் உறவினர்
ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் வேலுச்சாமிக்கு உறுதுணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக வேலூச்சாமிக்கு உதவியாக ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வேலுச்சாமியின் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விஷால் தொடர்பாக வெளியான பல புகைப்படங்களில் அவரை பார்க்க முடிகிறது. வேட்பு மனு பரீசிலனைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் உதவி பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் […]
பாலஸ்தீனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் என்று அங்கீகரித்து, அதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டனில் வெளியிட்டார்.
120 முஸ்லி।ம் குடும்பங்களுக்கு முல்லைத்தீவில் புதிய வீடுகள்!
முல்லைத்தீவைச் சேர்ந்த 120 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றுக்காலை முல்லைத்தீவு கிச்சிராபுரத்தில் இடம்பெற்றது. இந்தத் திட்டத்தில் ஓரிரண்டு தமிழ்க் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது. வீட்டுத் திட்டத்துக்கான நிதியை ஐக்கிய அரபு ராச்சியத்தின் தனவந்தர் ஒருவர் வழங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் காரணமாக கிச்சிராபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியமர்ந்த 120 குடும்பங்களுக்கே இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. […]





