பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் […]
Author: மலரவன்
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு […]
ஐபிஎல் போட்டியை நிறுத்துங்கள் அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுங்கள்
உச்ச நீதிமன்றம், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அறிவுறித்தியிருந்ததை, மதிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத காலக் கெடு வேண்டும் என கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. இதனால் தமிழகத்தில் காவிரிக்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி திரைத்துறையினர் அறவழிப் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அறிவுறித்தியிருந்ததை, மத்திய அரசு மதிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத காலக் கெடு வேண்டும் என கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. அதேபோல் தூத்துக்குடியில் […]
லண்டனில் காவிரிக்காக போராடும் தமிழர்கள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து லண்டனில் வரும் 14-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாததோடு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் வேறு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கும் 3 மாத கால அவகாசம் வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் […]
புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை கொண்ட அரிசி வகைகள்
இந்திய ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை குணப்படுத்தும் மூன்று பராம்பரிய அரிசி வகைகளை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் குறித்து உணவுமுறைகளின் விழிப்புணர்வு இல்லாததால் அதிகமாக இறப்புகள் ஏற்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இந்திய ஆராய்ச்சியாளர்கள், சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி ஆராய்ச்சியாளர் தீபக் சர்மா, […]
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை
ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம் கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றார். […]
தனி ஆளாக பேருந்தை தடுக்கும் திமுக பெண் தொண்டர்
காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்தன. அதன்பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், அதிமுக தொழிற்சங்கத்தை தவிர […]
போராட்டம் 100 சதவீதம் வெற்றி: ஸ்டாலின் பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் 5ம் நாளாக இன்று திமுக போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை […]
மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
மத்திய அரசு நிரந்தர தொழிலாளர்கள் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு நிரந்தர தொழிலாளர்கள் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தில், தனியார் துறைகளில் வேலைபுரியும் தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் நிர்வாகம் பணிநீக்கம் செய்ய முடியும் என்றும் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை செய்யமுடியாது என்றும் சட்டதிருத்தம் கொண்டு வந்தது. நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு […]





