பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை சரியாக […]
Author: மலரவன்
சாலையில் கொட்டிய 12 டன் சாக்லேட் திரவம்
போலந்து நாட்டில் 12 டன்கள் சாக்லேட் திரவத்தை ஏற்றி கொண்ட சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியதால் அதில் இருந்த சாக்லேட் திரவங்கள் சாலையில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் சாக்லேட் திரவத்தால் சூழப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணி குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த சாலையில் கொட்டிய சாக்லேட் திரவங்களை அகற்றி பின்னர் இந்த […]
சோமாலியா: மார்க்கெட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி
சோமாலியா மாகாணத்தில் உள்ள மொகடிஷீயில் உள்ள மார்க்கெட்டில் பயங்கராவதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர். சோமலியா நாட்டில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதராவளர்களான அல் ஷபாப் பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர். இவர்கள் அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இந்த பயங்கரவாதிகள் மொகடிஷுவில் அருகில் உள்ள லாயென் நகரில் இயங்கிவரும் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக […]
மே 14ம் தேதி வரைவு திட்டம் தாக்கல் – மத்திய அரசு அறிவிப்பு
காவிரி நீர் விவகாரத்தில் இனிமேல் அவகாசம் கேட்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று தெரிவித்துள்ளார் காவிரி நீர் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு 4 எம்.டி.சி நீரை தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மழை பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு சமீபத்டில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. கடந்த 8ம் தேதி […]
கேரளாவில் திருநங்கை திருநம்பி காதல் திருமணம்!
கேரள மாநிலத்தில் சூர்யா என்ற திருநங்கையும், இஷான் என்ற திருநம்பியும் காதலித்து சட்டப்படி திருமணம் செய்துக்கொண்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இஷான் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். சூர்யா பெண்ணாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர்கள் இருவரும் நண்பர்களாக அறிமுகமாகி காதலர்களாக மாறினார்கள். இதைத்தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து பெற்றோர் சம்மதத்துடன் சட்டப்படி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணம் கோலகலமாக நடைபெற்றது. மேலும் சட்டப்படி நடைப்பெற்ற […]
ஒரு நடிகன் நாடகம் ஆடுகிறான்…
ரஜினி என்ற ஒரு மாபெரும் நடிகன் நாடகம் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் திரைக் கதை, வசனம் யார் என்று ஊர் அறியும். நாம் அதை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். தமிழர்களின் துன்பத்திலும், துயரத்திலும், வேதனைகளிலும் சற்றும் பங்குக்கொள்ளாத சூப்பர் ஸ்டார் ரஜினி தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் ! முன்பு புதிய இந்தியா பிறந்தது என்றாரே அதே ரஜினி, தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் ! இவர்கள் இருக்கும் வரை […]
ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கைக்கான பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. போர் ஓய்வுக்குக்கு பின்னர் தற்போதைய விடுதலைப்புலிகளதும் அதன் போராளிகளது அரசியல் பொருளாதாரசெயற்பாடுகள் தொடர்பிலும். தாயகஅரசியல் பரப்பில் போராளிகளது பங்குபற்றுதலும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. போரில் நேரடியாக பங்குபற்றியவர்கள் புனர்வாழ்வின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட முடியுமானால் அதே போன்று போர்சூழலில் பலதரப்பட்ட காரணங்களுக்காகவும் காரணமின்றியும் நெடுநாட்கள் சிறையில் வாடும் அரசியல்கைதிகள் எவ்விதமானதொரு […]
எல்லாவற்றிற்கும் போராட வேண்டியுள்ளது
தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த் எல்லாவற்றிற்கும் போராட வேண்டியுள்ளதால், வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என தெரிவித்துள்ளார். தமிழர்களின் புத்தாண்டான சித்திரை திருநாளையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். சீருடையில் உள்ள காவலரை தாக்குவது வன்முறையின் உச்சம் என சில நாட்கள் முன்பாக திடீரென சீறினார் ரஜினிகாந்த். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சீருடையில் இருந்த காவலர்கள் 8 […]
ஆட்டத்தை துவங்கிய அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என கூறிவந்த நிலையில், தற்போது தாக்குதலை துவங்கியுள்ளார். சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கு […]
காவிரிக்காக தீக்குளித்த வைகோவின் உறவினர்
ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தைத் தொடங்கியபோது, அவருடன் நடைப்ப்பயணம் சென்று கொண்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்து பலியானார். இந்த அதிர்ச்சி செய்தியே இன்னும் மதிமுகவினர் மனதில் வருத்தத்தை வரவழைத்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு மதிமுக தொண்டர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்துள்ளார். வைகோவின் நெருங்கிய உறவினரான இவர் தற்போது உயிருக்கு ஊசலாடுவதாக […]





