ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த சில தினங்களாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஜனாதிபதியின் பலவீனம் காரணமாக சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக” …
Read More »க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய வேண்டுகோள்
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இவ்வாராம் நிறைவடையவுள்ளன. பாடசாலையின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைகின்றது. தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த அறிவித்தல் விடுத்துள்ளார்.
Read More »நெடுந்தீவில் ஈபிடிபிக்கு ஆப்பு! கூட்டமைப்பின் நகர்த்தல்
ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு சுற்றுப்பேச்சுகள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. 6 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும், சுயேச்சைக் குழு 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஓர் …
Read More »இன்றைய ராசிபலன் 19.02.2018
மேஷம்: எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள். ரிஷபம்: வேற்றுமதத்தவர் உதவுவார். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி …
Read More »முன்னாள் போராளிகள் 50 பேருக்கு கிடைத்த வாய்ப்பு
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட 50 முன்னாள் போராளிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். அவர்களுக்கு 55 வயதிற்குப் பின்னர் ஓய்வூதியக் கொடுப்பனவும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பலாலியில் உள்ள இராணுவப் பண்ணைகளில் தென்னை மரங்களைப் …
Read More »ஜனாதிபதியை சந்தித்தார் இரா. சம்பந்தன்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்ப நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன தோல்வியை தழுவிக்கொண்டன. …
Read More »இலங்கை அரசியலில் நாளைய தினம் முக்கிய திருப்புமுனை!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் தளம்பலைத் தோற்றுவித்துள்ள நிலையில், நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதால், நாளைய தினம் இரு கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியற்சிக்குமென அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பொருட்டு, கட்சித் தாவல்களும் இடம்பெறலாமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்றில் …
Read More »இன்னும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன்!! அதிர்ச்சி கொடுத்த ரணில்!!
19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தள்ளார். இன்னும் சில நாட்களில் நான் மரணித்துவிடலாம். மரணித்து விடக்கூடும். அப்படி ஏற்பட்டால் பிரதமர் பதிவிக்கு வேறொருவரை நியமிக்க முடியும். பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை என பிரதமர் கூறியதை கேட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு முடிவடைந்ததை …
Read More »நட்பு
புரிதலின் நட்பில் எதிர்பார்ப்பு இல்லை இன்பங்களில் விலகியும் துன்பங்களில் கை கொடுத்தும் இருப்பதின் சுகம் தனிதான் எளியதை ஏற்றுக்கொண்டு வலியதை விட்டு கொடுப்பதும் சுகம் தான் தோற்று போவதின் வலி தோழமையில் இருப்பதில்லை வெற்றியின் மாப்பு கண்ணீரில் வெளிப்படும் தோழமையின் தோல்விக்காக நலமா என்ற கேள்வி கூட நட்புக்கு தேவையில்லை பார்வையின் சங்கம்ம் கூட பரிவை சொல்லி விடும். புரிதலின் நட்பில் எதிர்பார்ப்பு இல்லை
Read More »போர்க்குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டது?
போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது என பிரிட்டன் வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால், பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அன்டன் கேஸின் போர் இரகசியங்கள் பற்றிய ஆவணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை கொழும்பு ஊடகமொன்றுக்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் …
Read More »