எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
புரிதலின் நட்பில்
எதிர்பார்ப்பு இல்லை
இன்பங்களில் விலகியும்
துன்பங்களில் கை கொடுத்தும்
இருப்பதின் சுகம் தனிதான்
எளியதை ஏற்றுக்கொண்டு
வலியதை விட்டு கொடுப்பதும்
சுகம் தான்
தோற்று போவதின்
வலி தோழமையில்
இருப்பதில்லை
வெற்றியின் மாப்பு
கண்ணீரில் வெளிப்படும்
தோழமையின் தோல்விக்காக
நலமா என்ற கேள்வி
கூட நட்புக்கு தேவையில்லை
பார்வையின் சங்கம்ம் கூட
பரிவை சொல்லி விடும்.
புரிதலின் நட்பில்
எதிர்பார்ப்பு இல்லை