Author: அருள்

நாடு கடத்தப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு விமான நிலையத்தில் நடந்தது?

இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த 46 வயதுடைய சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10 மணியளவில் இலங்கையை வந்தடைந்த இவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் அகதிகள் பேரவையால் கே.எஸ். ரத்னவேல் என்ற சட்டத்தரணியை ஏற்பாடு செய்து, அவரை விமான நிலையத்திற்கு அனுப்பி , சாந்தரூபனின் குடும்பத்தாரை […]

இன்றைய ராசிபலன் 23.02.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரக்கூடும். அடுத்தவர்கள் […]

கமலின் கட்சிக்கொடி காப்பியடிக்கப்பட்டதா?… எங்கிருந்து தெரியுமா?..

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியின் சின்னத்தின் வடிவம் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், கொடியில் உள்ள ஆறு கைகள், ஆறு தென்மாநிலங்களைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சின்னம் அறிமுகம் செய்த போது அதில் தாமரை, பாம்பு இடம் பெற்றிருந்தது. இதற்கு பலரும் கருத்து கூறினர். எங்கிருந்து காப்பியடித்தது என்று ஆதாரப்பூர்வமாக […]

ரணிலுக்கு பிடித்த பேராசை! பகிரங்கமாக சொல்லும் மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பேராசை பிடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் நிராகரித்த பிரதமர் இன்னமும் அதிகாரத்தில் இருப்பதென்பது அதிக பேராசையினாலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள விகாரைக்கு சென்றிருந்த மஹிந்த, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில், சமகால எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தனது நிலைப்பாட்டை சபாநாயகரிடம் அறிவிக்க வேண்டும் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! கொலையா தற்கொலையா?

கிளிநொச்சி – புதுமுறிப்புக்குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் நேற்றைய தினம் காணாமல் போனதாக பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளரான 25 வயதான ப.டனுசன் என்ற இளைஞரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கிளிநொச்சியிலிருந்து, கிளிநொச்சி மேற்கு நோக்கி சென்ற போதே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் […]

ரணில் உற்பட மேலும் சில அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு….!!! மைத்திரியின் அதிரடி

அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பாலும் மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, மங்கள சமரவீரவின் நிதியமைச்சு, கபீர் ஹரிமின் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, மலிக் சமரவிக்ரமவின் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்களிலும் […]

அவதானமாகப் பேசுங்கள்! டக்ளஸ் தேவானாந்தா வேண்டுகோள்

அரசியல்வாதிகளும், பொறுப்புவாய்ந்த ஊடகங்களும் மிக அவதானமாக செய்திகளையும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தியதலாவ – பண்டாரவளை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய போது, குறித்த சம்பவமானது கண்டிக்கத்தக்கதும், வருந்தத்தக்கதுமாகும். இது […]

இன்றைய ராசிபலன் 22.02.2018

மேஷம்: மாலை 4.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல்  அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்கவேண்டி வரும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து செல்லும். மாலை 4.45 மணி முதல் ராசிக்குள் […]

பதவிகளை இழக்கும் ஐ.தே.கட்சியின் இரண்டு அமைச்சர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரின் அமைச்சுப் பொறுப்புகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் நாளைய அமைச்சரவை மாற்றத்தின் போது இவர்களின் அமைச்சுப் பதவிகளுக்கான பொறுப்பு நீக்கப்படவுள்ளது. அதற்குப் பதிலாக குறித்த அமைச்சர்கள் இருவரும் பொறுப்புகள் அற்ற சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் இருவரும் வகித்த அமைச்சுப் பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அரசியல்வாதிகள் இருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! இளம் உறுப்பினர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இரு பிரதான கட்சிகள் இணைந்து நடத்திச் செல்லப்படும் சமகால அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளது. அதற்கமைய நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றஙம் ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த அமைச்சு பதவி அந்த கட்சிக்குள்ளேயும், சுதந்திர கட்சிக்கு கிடைத்த […]