Author: அருள்

இன்றைய ராசிபலன் 28.02.2018

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிகொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். […]

தனிமையில் இருந்த இளைஞன் சடலமாக மீட்பு: மனநலம் பாதிக்கப்பட்டவரா?

வவுனியா – குருமன்காடு, காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கலைச்செல்வன் எனும் 28 வயது இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. தாயார் இன்று காலை வேலைக்கு சென்ற சமயத்தில் குறித்த இளைஞர் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தாயார் வீடு திரும்பிய போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளார். அத்துடன், இளைஞரின் […]

பிரதமர் ரணிலுக்கு எச்சரிக்கை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். புத்தளத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டு மக்கள் ஐதேகவின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்காமல், வெறுமனே அமைச்சரவையை மாற்றியமைப்பதில் அர்த்தமில்லை. கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படாவிடின், பிரதமர் […]

ஸ்ரீதேவியின் பூதவுடல் இன்றிரவு மும்பை வந்தடையும்! நாளை தகனம்!

இன்று இரவுக்குள் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தடையும். இறுதி மரியாதை மற்றும் இறுதி சடங்குகளுக்கு பின்னர் நாளை உடல் தகனம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி தன்னுடன் உணவருந்த வருவார் என்று அவரது கணவர் போனி கபூர் காத்திருந்த நிலையில் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் அவர் பிரேதமாக கிடந்துள்ளார். துபாய் நகரில் நடிகை ஸ்ரீதேவி தங்கி இருந்த ஹோட்டல் அறையில் அவர் உயிருடன் இருந்த […]

உலகம்

அந்த தொடர்வண்டி பயணத்திலே தன்னிலை மறந்து என் தோளில் சாய்ந்து நீ உறங்கியப்போது வெளி கண்கள் நம்மை காதலர்களாவே நினைத்திருப்பார்களே தவிர அதையும் தாண்டி ஒரு நட்பு ஒரு சகோதரத்துவம் இவைகளேல்லாம் அவர்கள் நினைவுக்கு வந்தே இருக்காது பாழாய் போன உலகம்…

இன்றைய ராசிபலன் 27.02.2018

மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை […]

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அமீரக பத்திரிகை வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ஸ்ரீதேவி மரணம் குறித்து அமீரகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமீரகத்தில் வெளியாகும் ஆங்கில நாளிதழான கலீஜ் டைமிஸில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, திருமணம் முடிந்ததும் மும்பை சென்ற போனி கபூர் தனது மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க சனிக்கிழமை மாலை துபாய்க்கு மீண்டும் வந்தார். […]

அமைச்சரின் வீட்டில் இரகசியமாக கூடிய ஐ.தே.கட்சியினர்

ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் வீட்டில் நேற்றிரவு இந்த இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் விஜேதாச ராஜபக்ச, வசந்த சேனாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக்கட்சியின் இரண்டாம் நிலை முக்கியஸ்தர்கள் தொலைபேசி வாயிலாக இணைந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றத்தை நல்ல முறையிலோ அல்லது […]

ரணிலின் பதவி தற்காலிகமானது! விரைவில் பதவி கைமாற்றப்படும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளார் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், விரைவில் இப்பதவி வேறு ஒருவருக்கு மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நேற்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டார். […]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

திருடர்களை பிடிக்கும் பதவியை ரணிலிடம் மைத்திரி வழங்கியது ஏன்?

கடந்த உள்ளூராட்சி தேர்தல் மேடைகளில் ரணில் திருடன் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது திருடர்களை பிடிக்கும் கடமையை பிரதமர் ரணிலிடம் ஒப்படைத்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் ஊடாக பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், அவரது பதவியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனினும் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி பிரதமருக்கு வழக்கப்பட்டுள்ளது. […]