Author: அருள்

24 வயது இளைஞன் சடலமாக மீட்பு

இன்று காலை புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் துவான் தில்கான் (வயது 24) என்ற இளைஞர் ஆற்றுக்கு குளிக்க சென்ற பின்னர் சடலமாக மீட்கபட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. குறித்த இளைஞன் இன்று காலையில் தனது சகோதரர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். சகோதரர்கள் இருவரும் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால். உடனடியாக குளித்து விட்டு சென்றுள்ளனர். பின் இவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய […]

கிளிநொச்சியில் தமிழ் மொழி புறகணிப்பு! மனோகணேசன் கொந்தளிப்பு

கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் வீதியில் புதிதாக அமைக்கபட்ட பதாகையில் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.ஆனால் தமிழ் மொழியை புறகணித்து விட்டனர். இதை பார்த்த தமிழ் மக்கள் பதாகையில் தங்கள் மொழியின் ஏன் எழுதபடவில்லை என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அமைச்சர் மனோகணசனும் இது என்ன அநியாயம் என இச்சம்பவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

இவர் வந்தால் பிக்பாஸ் வீட்டில் பிரளயமே வெடிக்குமா?

பிக் பாஸ் வீட்டிற்கு இவர் வந்தால் வீடு ரணகளமாகிடுமே என்று கமல் சொன்னது இவரை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு தம்பதி செல்வது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் 2 […]

கிழக்கு பல்கலைக்கழக மாணவி சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். நாவற்குடா கிழக்கு, 4 குறுக்கு வீதி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் . […]

யாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது!

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவோடு இரவாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது […]

தன்னை கேலி செய்தவர்களிடம் மஹிந்த் விடுத்துள்ள சவால்

வரி அறவீடுகளை 20 வீதமாக குறைத்து காண்பிக்குமாறு தற்போது சவால் விடும் நபர்கள் அன்று போரை முடிவுக்கு கொண்டு வந்து காட்டுமாறு தனக்கு சவால் விடுத்தார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது எனக்கு சவால் விடுவோர் நான் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நினைக்கவில்லை. நான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே அவர்கள் எந்த அச்சமும் சந்தேகமும் இன்றி வடக்கு, கிழக்கிற்கு செல்கின்றனர். […]

சிங்கப்பூரை இரவில் சுற்றிவந்தார் வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் இன்றிரவு சிங்கப்பூரை சுற்றி பார்த்து பலரிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நாளை காலை அமெரிக்க ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு முன்னதாக இரவில் கிம் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துள்ளார். இன்று மாலை ஆறு மணியளவில் கிம் தங்கியுள்ள சென் ரெஜிஸ் ஹோட்டலிற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைவதை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர். அதற்கு சில மணிநேரத்தின் பின்னர் கிம் மரினா பே சான்ட்ஸ் என்ற ஆடம்பரஹோட்டலிற்குள் […]

ரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனால் பலர் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார். முன் வெளியிட்ட அம்மா அணி என்ற கட்சியின் பெயரை மாற்றி, தற்பொழுது அண்ணா திராவிடர் கழகம் […]

பின்னுக்கு தள்ளப்பட்ட புதியதலைமுறை: பழிவாங்கும் நடவடிக்கையா?

பிரபல தமிழ் செய்தி சேனல் புதியதலைமுறை சமீபத்தில் வட்டமேஜை விவாதம் என்ற நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது. இந்த விவாத நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், இதனால் விவாதத்தில் பிரச்சனை உருவாகியதாகவும் தகவல்கள் வந்தது. இதனையடுத்து அமீர் மீதும் புதிய தலைமுறை மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஊடகம் மீதான வழக்குப்பதிவுக்கு வழக்கம்போல் அரசியல் கட்சி தலைவர்கள் இதுவொரு பழிவாங்கும் நடவடிக்கை என அறிக்கை விட்டனர். புதியதலைமுறை […]

டிடிவி தினகரனின் மாஸ்டர் தான் ஸ்டாலின்

டிடிவி தினகரனும் திமுகவும் மறைமுகமாக இணைந்து செயல்பட்டு வருவதாக கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை அவ்வப்போது தினகரனும் மறுத்து வருகிறார். இந்த நிலையில் டிடிவி தினகரனின் மாஸ்டரே திமுக செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து மேலும் கூறியதாவது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை சபரிமலையின் 18 படிகள் என்று கூறியுள்ளார் தினகரன். இவரென்ன […]