மைத்திரிபால சிறிசேன உயிரிழக்கப்போவதாக கூறிய சோதிடருக்கு பிணை
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிக்கப் போவதாக, சமூக வலைத்தளம் ஒன்றின் காணொளி ஒன்றின் மூலம் ஆரூடத்தை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சோதிடர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட கைது செய்ய்பபட்டிருந்தார்.
மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 26ஆம் நாள் மரணமடைவார் என்றும், அவ்வாறு நடக்கவில்லையேல் தாம் அதன் பின்னர் ஆரூடம் கூறப் போவதில்லை என்றும் விஜித றோகண கூறியிருந்தார்.
அத்துடன், பிரதமராக மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவும் பதவியேற்பது நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட காணொளி முகநூலில் வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே நேற்று மாலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சோதிடர் விஜித றோகணவைக் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சோதிடர், விஜித றோகண, 1987ஆம் ஆண்டு கொழும்பில் அணிவகுப்பு மரியாதையின் போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை துப்பாக்கி பிடியினால் தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.