வில்பத்து தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் தவறானது ; ஸ்ரீநேசன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு அனைத்து சிறுபான்மை சமூகங்களும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் அநீதிகளுக்கு எதிராக போராடும் பொழுது அதனை பொருட்படுத்தாது செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு – குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரு சமுகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மன்னார் – வில்பத்து பிரதேசத்தில் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் மற்றும் வீடுகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ள நிலையில், அந்த பிரதேசம் வன இலாக்கவிற்காவிற்கு சொந்தமானது என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டமை தவறு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *