தையல் நிலை­யத்­துக்கு விச­மி­க­ளால் தீ வைப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்ப்­பா­ணம் நல்­லூர் கோவில் வீதி­யில் தையல் நிலை­யம் விச­மி­க­ளால் தீ வைத்து எரி­யூட்­டப்­பட்­டது என யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு இடம்­பெற்­றது.

நல்­லூ­ரில் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரைக் சுட்­டுக்­கொன்ற வழக்­கின் சந்­தே­க­ந­ப­ரின் குடும்­பமே இந்­தச் செயலை செய்­தது என தைய­ல­கத்­தின் உரி­மை­யா­ளர் குற்­ற­­­­­­­­­­ஞ்சாட்­­டி­னார். தொடர்­பில் உரி­மை­யா­ளர் தெரி­வித்­த­தா­வது:

2009ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதத்­தி­ல் இ­ருந்து நல்­லூர் கோவில் வீதி­யில் தையல் நிலை­யம் வைத்­துள்­ளேன். என்னை அந்த இடத்­தி­லி­ருந்து அகற்ற அய­ல­வர்­கள் பல தட­வை­கள் முயற்­சி­ களை முன்­னெ­டுத்­த­னர்.

மின்­சார சபைக்கு முறைப்­பாடு செய்து எனது கடைக்­கான மின் இணைப்­பையே துண்­டித்­த­னர். பின்­னர் உரிய கார­ணங்­க­ளைக் கூறி மீள­வும் மின் இணைப்பு வழங்­கப்­பட்­டது. மேலும் எனது கடை­யின் பூட்டை உடைத்த அய­ல­வர் ஒரு­வ­ருக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்கு உள்­ளது. இந்த நிலை­யி­லேயே அவர்­கள் இந்த இழி செயலை நேற்­றி­ரவு (நேற்றுமுன்தினம்) செய்­துள்­ள­னர் -–என்­றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *