120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த 120 முஸ்­லிம் குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் அமைப்­ப­தற்கு அடிக்­கல் நடப்­பட்­டது. இந்த நிகழ்வு நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரத்தில் இடம்­பெற்­றது.

இந்தத் திட்­டத்­தில் ஓரி­ரண்டு தமிழ்க் குடும்­பங்­க­ளும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன என அறிய முடி­கின்­றது.

வீட்­டுத் திட்­டத்­துக்­கான நிதியை ஐக்­கிய அர­பு­ ராச்­சி­யத்­தின் தன­வந்­தர் ஒரு­வர் வழங்­க­வுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக கிச்­சி­ரா­பு­ரத்­தில் இருந்து இடம்­பெ­யர்ந்து 2009ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் மீள்­கு­டி­ய­மர்ந்த 120 குடும்­பங்­க­ளுக்கே இந்த வீடு­கள் வழங்கப்படவுள்­ளன.

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் வை.ஜெனோ­ப­ரால், அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோ­ளுக்கு இணங்க அவ­ரின் ஏற்­பாட்­டில் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என அறிய முடி­கி­றது.

இதில் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னின் பிரத்­தி­யேக செய­லா­ளர் ரிப்­கான் பதி­யூ­தீன், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் வை.ஜெனோ­பர் வீட்­டு த்­திட்­டத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­கும் இணைப்­பா­ளர் முக­மட் றவ் , அமைச்­ச­ரின் இணைப்­புச் செய­லா­ளர் எம்.எச்.முஜா­கீர், அமைச்­சர் ரிசாத் ப­தி­யூ­தீ­னின் தந்தை பதி­யு­தீன் ஆகி­யோர் கலந்­து­கொண்டு அடிக்­கல்லை நட்­ட­னர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *