அஜித்துடன் ஓவியா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் அஜித் நடிக்கும் படத்தில் என்ன வேடமாக இருந்தாலும் நான் நடிக்கத் தயார் என்று நடிகை ஓவியா தனது ரசிகர் மத்தியில் தெரிவித்துள்ளார்.

ஓவியா தான் இப்போது பல இளைஞர்களின் கனவுக் கன்னி. பிக்-பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டார் அவர் .

தற்போது இவர் எந்த நிகழ்வுக்குச் சென்றாலும் அமோக வரவேற்பு கிடைக்கிறது. அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவரிடம் தல அஜித்துடன் நடிப்பீர்களா என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், அவர்கள் என்னை கூப்பிட்டால் எந்த வேடத்திலும் நடிக்கத் தயார். வேலைக்காரியாகக் கூட நான் நடிப்பேன், அதில் எனக்குப் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *