வெனிசுவேலாவின் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது.
இதையடுத்து, வெனிசுவேலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
மேலும், வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், இருநாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், தடையை மீறி சட்டவிரோதமாக மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற வெனிசுவேலாவின் மிகப்பெரிய கப்பலை அமெரிக்க படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் மருமகன்கள் 3 பேருக்கு எதிராக அமெரிக்கா தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.





