எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று தாலிபான்கள் வெறியாட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 8 போலீசாரை சுட்டுக் கொன்று தாலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தாக்ஹர் மாகாணத்தில் உள்ள தார்குவாத்தில் நேற்று போலீசார் மற்றும் தாலிபான் தீவிராவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் 8 போலீசார் பலியாகினர். மேலும், 3 போலீசார் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரை சுட்டுக் கொன்றது மட்டுமல்லாமல் தார்குவாத் மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளையும் தாலிபான்கள் துண்டித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்க ராணுவமும் ஈடுபட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் ஜிம் மேத்யூ, ” அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே தாலிபான்களுக்கு ரஷ்ய அரசு ஆயுதங்களை வழங்கி உதவி செய்கின்றது” என குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *