டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெப்ரவரி 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகைத்தர உள்ளார்.

அதிபரான பிறகு டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறை.

இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாக உள்ளன. அகமாதாபாத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் டெல்லி செல்ல உள்ளார்.

இதேவேளை, டிரம்பின் வருகைக்காக அகமாதாபாத் நகரம் தயாராகி வருகிறது. இதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையின்போது, 25 ஐபிஎஸ் அதிகாரிகள், 65 துணை ஆணையர் நிலை காவல்துறை அதிகாரிகள், 200 ஆய்வாளர்கள், 800 துணை ஆய்வாளர்கள் மற்றும் 10,000 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளதாக அகமதாபாத் நகர காவல்துறை துணை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையம், சாலை பயணம், காந்தி ஆசிரமம் மற்றும் மொடேரா அரங்க நிகழ்ச்சிகளுக்காக மொத்தம் ஐந்து பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News