கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில்,கனடாவில் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை மொத்தம் 181,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.