டிரம்பின் முடிவால் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் இந்தியர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்தாகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இந்த விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது.

ஒபாமா அதிபராக இருந்த காலத்தில்,‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு எச்-4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.

தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்பவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (எச்-4 விசாதாரர்களுக்கு) அங்கு வேலை பார்ப்பதற்கான அனுமதி ரத்தாகும் நிலை உருவாகியுள்ளது.

டிரம்பின் இந்த முடிவு நடைமுறைக்கு வரும்பட்சத்தில், அது பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *