பாலி தீவில் 50 வருடங்களுக்கு பிறகு வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்தது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது. அதில் இருந்து வரும் புகை 2300 அடி உயரத்திற்கு எழுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு தங்கி இருக்கும் கிராம மக்கள் வேறு இடத்திற்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன், கால்நடை விலங்களுடன் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பாலித்தீவில் எரிமலை வெடிக்க தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாலிதீவுத்தில் விமானசேவைகள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1963-ம் ஆண்டு 50 ஆண்டுகளுக்கு முன் இந்த எரிமலை வெடித்தது. அப்போது 1600 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் சுமார் 160 எரிமலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *