யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்தார். ரஜினியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.

இந்த சந்திப்பு குறித்து ரஜினி பேட்டியளித்ததாவது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன். மேலும், எனது அரசியல் பிரவேசத்தை குறித்து அவரிடம் தெரிவித்து ஆசி பெற்றேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்டாலின், ரஜினி – கருணாநிதி சந்திப்பு குறித்து பின்வருமாறு பேசினார். அரசியல் பண்பாடு, நாகரிகத்தின் அடிப்படையில் கருணாநிதி – ரஜினிகாந்த் சந்திப்பு நடைபெற்றது. ரஜினி ஆன்மிக அரசியல் நடத்தப்போகிறேன் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி மட்டும்தான் கேட்கிறாரா, ஆதரவும் கேட்கிறாரா? அதை ஏற்று கொள்ளலாமா வேண்டாமா என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம். மேலும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை அழித்து விடலாம் என்று சிலர் திட்டமிட்டு பலருடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி இருப்பதாக ஒரு உருவகத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
இந்த மண் திராவிட இயக்கத்தின் மண். அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்து பார்த்தவர்கள் எல்லாம் தோற்ற கதைகள் நாட்டிற்கே தெரியும். திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *