சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை என்று தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை. சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்க முடியாது. சசிகலா முதலமைச்சராவதை மக்கள் விரும்பவில்லை. சசிகலா முதலமைச்சரானால் தமிழகத்தில் நிலையற்ற தன்மை தொடரும்

என்னை நம்பி வந்தவர்களை நான் சுயநலத்துக்காக ஏமாற்ற மாட்டேன். ஆசியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்.

என் பயணத்திற்கு பல தடைகள் வருகின்றன. பாதுகாப்புகள் மறுக்கப்படுகின்றன. பாதுகாப்பு மறுக்கப்படுவதால் பயண தேதிகளை அறிவிக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites