அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

ஓ.பன்னீர்செல்வத்தின் பரபரப்பு பேட்டியை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் குவிப்பு :

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார். இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கட்சிக்குள் ஓ.பி.எஸ்., அணி, சசிகலா அணி என உருவாகி இருப்பதால் இன்றைய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தகராறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் அடுத்து என்ன நடக்க போகிறது என தெரிந்து கொள்ள அதிமுக தொண்டர்களும் பெருமளவில் கட்சி அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites