தமிழக அரசு காலண்டரில் மோடி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழக அரசு தயாரித்து வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான மாதாந்திர காலண்டரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாதாந்திர காலண்டர் வெளியிடப்படுவது வழக்கம். இந்த காலண்டரில் முதல்வரின் படம் இடபெறும். மேலும் தமிழகத்தின் முக்கியமான சில இடங்களும் இடம்பெறும். தமிழக அரசு சார்பாக அச்சிடப்பட்ட இந்த காலண்டர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும்.

இந்த வருடம் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான மாதாந்திர காலண்டரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுப்பது போன்ற படம் உள்ளது.

இந்த படம் சொல்லும் கதை என்ன?

தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவையும், ஆட்சியையும் பாஜக மறைமுகமாக இருந்து இயக்குவதாக பலவேறு நேரங்களில் பல்வேறு கட்சிகள் விமர்சித்து வந்தன. ஆனால் இதனை அதிமுக மறுத்துவந்தது.

ஆனால் அவர்களது அனுகுமுறை அதனை அப்படியே வெளிச்சம்போட்டுப் காட்டியது. அதே போல தற்போதும் தமிழக அரசு காலண்டரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகத்தை மீண்டும் எழுப்ப வைக்கிறது இந்த படம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *