நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் – ஆளுநரிடம் ஜமாலுதீன் அறிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் – ஆளுநரிடம் ஜமாலுதீன் அறிக்கை

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிக்கை அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமையன்று அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மேஜை தள்ளிவிடப்பட்டது. இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

சபையில் இருந்து வெளியேற்றப்பட்டதும், ஸ்டாலின் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவம் குறித்து கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் விளக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார். அதன்படி, சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று ஆளுநர் அலுவலத்தில் அறிக்கை வழங்கி உள்ளார். அதில், நம்பிக்கை தீர்மானத்திற்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபை கூட்டத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நடந்த சம்பவங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்பாக விளக்கியுள்ளார்.

இந்த விளக்க அறிக்கை மற்றும் எதிரணியினரின் புகார் ஆகியவற்றின் அடிப்படையில், ஆளுநர் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News