அதிமுக கட்சி அவசர ஆலோசனை கூட்டம் – ஓ.பி.எஸ் நீக்கமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அதிமுக கட்சி அவசர ஆலோசனை கூட்டம் – ஓ.பி.எஸ் நீக்கமா?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தடாலடி பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை கூட்டப்பட்டுள்ளது. இதில் சசிகலா தனக்கு அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்கள் ஆதரவும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வார் என தெரிகிறது. மேலும், பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கவும் சசிகலா நடவடிக்கை எடுக்க கூடும் என தெரிகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites