சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக டிரைவர் இன்றி இயங்கும் சுரங்க ரெயில் சேவை தொடக்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக டிரைவர் இன்றி தானாக இயங்கும் சுரங்க ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ரெயில்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ரெயில் சேவையில் சிறந்து விளங்குகிறது. புல்லட் ரெயில், சுரங்க ரெயில் சேவையில் அதிவிரைவான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு டிரைவர் இன்றி தானாக இயங்கும் சுரங்க ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தலைநகர் பெய்ஜிங்கில் யங்பாங்கில் இருந்து பாங் ஷான் வரை 16.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆளில்லாமல் இயங்கும் வகையில் ரெயில் தண்ட வாளம் அமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே அதாவது சீனாவிலேயே உருவாக்கப்பட்ட தொழில் நுட்பமாகும்.

இந்த கட்டுமான பணிகள் இந்த ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிதாக உருவாக்கப்படும் 2 ரெயில் தண்டவாள வழித்தடங்களில் இந்த ஆண்டு இறுதியில் ரெயில்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *