கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று பூமி மாறும்: மீண்டும் பீதியைக் கிளப்பும் விஞ்ஞானி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பூமி தொடர்ந்தும் வெப்பமயமாகி கொண்டே இருந்தால் 2600ஆம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் மீண்டும் கூறினார்

பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

பூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கபடி எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே வருகிறது.

இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என எச்சரித்துள்ளார்.

இதனால் பூமியில் உயிரினங்கள் வாழமுடியாத சூழ்நிலை ஏற்படும். ஆனால் மனிதர்கள் நினைத்தால் இன்னும் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு உயிர்வாழ முடியும்.

அதாவது மனிதர்கள் சூரிய மண்டலத்தில் மிக அருகேயுள்ள ஆல்பா சென்டாரி என்ற துணை கிரகத்தில் குடியேறலாம் அல்லது பூமிக்கு அருகேயுள்ள புளூட்டோவுக்கு சென்று தங்கலாம்.

இவற்றில் சூரிய மண்டலத்துக்கு அருகேயுள்ள ஆல்பா சென்டாரி துணை கிரகம்தான் சிறந்தது என கருதுகிறேன். இக்கிரகம் பூமியில் இருந்து 400 கோடி மைல் தொலைவில் உள்ளது. இது செவ்வாய் கிரகத்தை விட குறைந்த தொலைவில் உள்ளது.

இக்கிரகத்துக்கு சிறிய விமானத்தில் ஒரு வாரத்திற்குள் செல்ல முடியும். எனவே அதற்கான ஏற்பாட்டை இன்னும் 20 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *