வட மத்திய மாகாணத்தின் அமைச்சராக சுசில் குணரத்ன நியமனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுசில் குணரத்ன வட மத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

முன்னர் அமைச்சராக இருந்த எஸ்.எம் ரஞ்சித் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மத்திய மாகாண அமைச்சராக சுசில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாண சபையின் அமைச்சராகவிருந்த கே.எச். நந்தசேனவை அவரது அமைச்சுப் பதவியில் இருந்து முன்னறிவித்தல் இன்றி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே எஸ்.எம். ரஞ்ஜித் தனது பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *