சட்டவிரோதமாக கள் விற்ற ஒன்பது பேருக்குத் தண்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மற்றும் அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த ஒன்பது பேருக்கு நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தால் பருத்தித்துறை நீதிமன்றில் தொடுக்கப்பட்ட குறித்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்போதே நீதிவான் நளினி சுபாகரனால் 13 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மூவருக்கு தலா 2 ஆயிரம் ரூபாவும், ஒருவருக்கு ஆயிரம் ரூபாவும் விதிக்கப்பட்டது.

அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அறுவருக்கு தலா ஆயிரம் ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *