நவீன லேசர் வெசாக் அலங்காரப் பந்தல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பு காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வலங்காரப் பந்தல் நாளை மறுதினம் (புதன்கிழமை) மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும் இந்த வெசாக் அலங்கார பந்தல், கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்நவீன இவ்வெசாக் அலங்கார பந்தல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற உலகின் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரபந்தலின் உயரம் 60 அடிகள் என்றும் அகலம் 40 அடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாபாத்திரங்கள் இவ் லேசர் கீற்று வெசாக் அலங்காரப் பந்தலில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வெசாக் அலங்காரப் பந்தலை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *