யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதுதான் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வட, கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து வடக்கு,கிழக்கில் இன்று பல்வேறு தரப்பாலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச்சந்தி பசுமை பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலும் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியாவில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. குறித்த கண்டன பேரணி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டதால் சட்டம் சாகாது, நீதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல் நீதியை யாரிடம் எதிர்பார்ப்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *