இளஞ்செழியனுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்ப்பாண பிரதான நீதவான் நீதிமன்றின் நீதிபதி இளஞ்செழியனுடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இடம்பெற்ற சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ளார்.

யாழ். நல்லூர் பின்வீதியில் நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் தற்பொழுது சிலாபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

சடலம் மாங்குளம் பகுதியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நீதிபதி இளஞ்செழியனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிபதிக்கு அதிகளவிலான பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *