காவிரி விவகாரம் தொடர்பாக யாரும் தீக்குளிக்க வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தை தொடங்கியபோது, அவருடன் நடைப்பயணம் சென்று கொண்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்து பலியானார். அந்த அதிர்ச்சி செய்தியே இன்னும் மதிமுகவினர் மனதில் வருத்தத்தை வரவழைத்து கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு மதிமுக தொண்டர் இன்று தீக்குளித்துள்ளார். விருதுநகரை சேர்ந்த […]
Tag: வேண்டுகோள்
ஐ.பி.எல் போட்டியை புறக்கணியுங்கள்
சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்குமாறு தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம் பூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், […]
ஜெயலலிதா மரணம் குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம் துணை முதல்வர் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோகமாக வெற்றிபெற்றார். அவரது வெற்றி பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்தனர். தினகரனின் வெற்றியால் எடப்பாடி அணி அதிர்ந்து போனது. தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் […]
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள்
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் ஆற்றிய ஈஸ்டர் தின உரையில், அண்மையில் சிரியாவில் விஷ வாயு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது […]
விவசாயிகளுக்காக ஓரணியாக திரள்வோம்: தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
ஒரு நாள் இடர்பாடுகளை பொறுத்துக்கொண்டு விவசாயிகளுக்காக ஓரணியாக திரள்வோம் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆட்சியிலிருந்தாலும் மக்களின் நலனைப் புறக்கணிக்கும் முதல்வரும் அமைச்சர்களும் உள்ள மாநிலத்தில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கமாக தி.மு.கழகம் இருக்கிறது. வறட்சியாலும் கடன் தொல்லைகளாலும் வாழ்வுரிமை இழந்து, தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணங்களுக்கும் உள்ளாகி வரும் […]





