வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ஜெயந்த டி சில்வாவின் அழைப்பின் பேரில் காங்கேசன்துறை கடற்படைத்தளத்திற்கு விஜயம் செய்தார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் காரைநகர் துறைமுகம் ஆகியவற்றையும் ஆளுநர் பார்வையிட்டுள்ளார். கடற்படையினருடன் கலந்துரையாடிய ஆளுநர் யாழ் குடாநாட்டில் போதைப்பொருள் உள்நுழைவதை தடுப்பதற்கு கடற்படையினர் மேற்கொண்டுவரும் பணிகளை பாராட்டுவதாக இதன்போது தெரிவித்திருந்தார்.
Tag: வடக்கு மாகாண ஆளுநர்
பிரபாகரனோ இல்லை; காணாமல்போனோரை யாரிடம் போய் கேட்பது? – கேள்வி எழுப்புகிறார் வடக்கு ஆளுநர்
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது இல்லை. அப்படியானால் காணாமல்போனவர்களை யாரிடம் போய் கேட்பது?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “தமிழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈரோஸ், இந்திய அமைதிப் படை, இலங்கை இராணுவம் ஆகியன அந்தக் காலத்தில் இங்கே இருந்தன. இந்தப் பகுதியிலிருந்த […]
அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வட. மாகாணசபை தவறவிட்டுள்ளது: தவராசா
வடக்கு மாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததைவிட புதிதாக என்ன அபிவிருத்தியை கண்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டிருக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார். வட. மாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், […]





